Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து பிஎம்எஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து பிஎம்எஸ் ஆர்ப்பாட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 17th April 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசைக் கண்டித்து நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் முன் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் முந்திரி ஆலை, கூட்டுறவு நூற்பாலை, ரப்பர் பால் வெட்டுதல், தனியார் தோட்டங்களில் பணிபுரிபவர்கள் என பல்வேறுப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறைந்த பட்சம் மாதம் ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.தாணுமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.சண்முகம், பொருளாளர் கே.செந்தில் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலர் கே.முருகேசன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.விஸ்வநாதன், பொதுச் செயலர் ஆர்.எஸ்.வினோத்குமார், மாநிலச் செயலர் ஏ.பத்மநாபபிள்ளை ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எம்.மணிகண்டன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai