Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    மாவட்டச் செயலர் ஏ.எஸ். சுகதன் தலைமை வகித்தார். துணைச் செயலர் ஷிபு முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் மேசியா வரவேற்றார்.மேல்புறம் ஒன்றியச் செயலர் எம். சுரேஷ், தக்கலை ஒன்றியச் செயலர் வி. ஐயப்பன், களியக்காவிளை பேரூர் செயலர் பாபு, இரணியல் பேரூர் செயலர் மணிமாறன், பாகோடு பேரூர் செயலர் வின்சென்ட், மாவட்ட தொழிலாளர் முன்னணி நிர்வாகி முருகன், விவசாய அணி நிர்வாகி தேவராஜ், தக்கலை ஒன்றிய துணைச் செயலர் அருண், பிரவீண், ஜி. கதிரவன், வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆந்திர சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்; கொலையானவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai