Enable Javscript for better performance
4 ஆண்டுகளாக மக்கள் அவதி குலசேகரம்-திருவரம்பு சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    4 ஆண்டுகளாக மக்கள் அவதி குலசேகரம்-திருவரம்பு சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

    By குலசேகரம்  |   Published on : 17th April 2015 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் குலசேகரம்-திருவரம்பு இடையே கடந்த 4 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படும் சுமார் 6 கி.மீ. தொலைவு சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குலசேகரம் நாகக்கோடுமுதல் திருவரம்புவரையிலான சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர், சில மாதங்களிலேயே இச்சாலை சேதமடைந்தது.

    இச்சாலைப் பகுதியில் நாகக்கோடு புனித அந்தோணியார் ஆலயம், இட்டகவேலி நீல கேசி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், குலசேகரம் அருமனையை இணைக்கவும், பல்வேறு குக்கிராமங்களுக்கு செல்லவும் இது பிரதான சாலையாக உள்ளது.

    இச்சாலை 4 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலையில், போக்குவரத்துக்கு மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமமடைகின்றனர். அவ்வப்போது, தாற்காலிக சீரமைப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் மீண்டும் சாலை பழுதடைந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சாலை சீரமைப்புப் போராட்டக் குழுத் தலைவர் எஸ். ஜார்ஜ் கூறுகையில், இச்சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை நேரில் மனு அளித்துள்ளோம். பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. உடனடியாக சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai