Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், கல்லூரி முதல்வர் டி.வி.எஸ். பிள்ளை தேசிய கொடியை ஏற்றினார்.

    கல்லூரி பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவர், மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

    பழவிளை நாடார் மஹாஜன சங்கம், காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி துணைத் தலைவர் டி.உதயகுமார் தலைமை வகித்தார். தாளாளர் டி. செல்வகுமார் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் (பொறுப்பு) ஏ. ஆதிசுவாமி, காமராஜ் கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ். குமரேசன் விரிவுரையாளர்கள் எம்.பரசுராம், கே. ரஞ்சித், ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக உடற்கல்வி இயக்குநர் டி. சதீஷ்குமார் வரவேற்றார்.

    கோட்டாறு குமரி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளர் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்தார். முதல்வர் சாம் அருள்மணி முன்னிலை வகித்தார். மாணவர், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    வடக்கு தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி வள்ளி தலைமை வகித்தார். கிராமக் கல்விக்குழுத் தலைவர் எஸ். ஆறுமுகம்பிள்ளை முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் எஸ். சுவாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். தலைமை ஆசிரியர் எஸ். டேவிட்ராஜ் வரவேற்றார்.

    குமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் அதன் தலைவர் எம்.தாமஸ் தேசிய கொடியை ஏற்றினார்.

    நாகர்கோவில் வெள்ளாளர் காலனி ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில், வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா தேசிய கொடியேற்றி முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ் தேசிய கொடியை ஏற்றினார். நகரத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் நடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் செல்லையா, சிவலிங்கம், அசோக்ராஜ், தங்கராஜ், விசுவம், ஜான்சௌந்தர், பொதுச் செயலர்கள் திருத்துவதாஸ், செல்வராஜ், வட்டாரத் தலைவர்கள் கில்மன்புரூஸ், செல்வராஜ், எஸ்.சி, எஸ்.டி. மாவட்டத் தலைவர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் மாவட்ட அமைப்பாளர் ஆர். முருகேசன் தலைமை வகித்தார். தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத் தலைவர் அரங்கசாமி, மாவட்ட துணைத் தலைவர் அசோக்ராஜ் உள்ளிட்டோ கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி: பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவி பிரபா வின்ஸ்டன் தேசிய கொடியேற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

    அகஸ்தீசுவரம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் அதன் தலைவி இ.சாந்தி இசக்கிமுத்து தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில், ஆணையாளர் நாகராஜன், துணைத் தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அகஸ்தீசுவரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் க.அம்புரோஸ், பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் ஆ.கண்ணன் உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    கன்னியாகுமரியை அடுத்த ஏ.வி.கே நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு கல்லூரித் தாளாளர் டி.மரியவிக்டர் தலைமை வகித்தார். அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எம்.வின்சென்ட் தேசிய கொடியை ஏற்றினார்.

    களியக்காவிளை: பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவி டி.ஆர். ஆஷாடயானா தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜி. சுதீர்குமார்உள்ளிட்டோர் கந்துகொண்டனர்.

    மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு அருகேயுள்ள அம்பலக்காலை கண்ணம்பள்ளி பிரண்ட்ஸ் கிளப் சார்பில், நடைபெற்ற விழாவில் மாங்கோடு ஊராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் ஜோஸ் தேசிய கொடி ஏற்றினார்.

    தொடர்ந்து நடந்த விழாவுக்கு குழிவிளை விஜயகுமார் தலைமை வகித்தார். மாங்கோடு ஊராட்சித் தலைவர் ஞானசெüந்தரி முன்னிலை வகித்தார். விழாவில் சமூக சேவகர் ஷைஜுஆல்பி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டினு யோகன்னான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஆடைகளை வழங்கினர்.

    கருங்கல்: கருங்கல் பேரூராட்சி சார்பில், நடைபெற்ற விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் எப்சிராணி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். செயல் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். இதில், அலுவலப்பணியாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைத்தலைவர் மில்ற்றா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டாளி, காந்தியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியத் தலைவர் ததேயூ பிரேம்குமார் தேசிய கொடியேற்றினார்.

    கருங்கல் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மூத்த உறுப்பினர் சோபனம் தலைமை வகித்தார். செயலர் துரைராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் பிளச்சர் தேசிய கொடியேற்றினார்.

    குலசேகரம்: ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் ஜி.ரசல் ராஜ் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் விஜயன் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிரேம சுதா லெனின் தேசிய கொடியேற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai