Enable Javscript for better performance
குளச்சல் கடற்கரையை தூய்மைப் படுத்திய மாணவர், மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    குளச்சல் கடற்கரையை தூய்மைப் படுத்திய மாணவர், மாணவிகள்

    By நாகர்கோவில்  |   Published on : 27th January 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குளச்சல் மீன்பிடித்துறைமுக வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.

    குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயம் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் குளச்சல் மீன்பிடித்துறை வளாகம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு காணிக்கை மாதா ஆலய இணை பங்குத்தந்தையர்கள் அம்புரோஸ், பிரவின், மார்டின் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதையொட்டி நடைபெற்ற மாணவர்களின் பேரணியை தூய மரியன்னை பள்ளித் தலைமை ஆசிரியர் லெஸ்லின் தொடங்கி வைத்தார்.

    குளச்சல் பங்கு நிர்வாக செயலர் ஜான், பொருளாளர் உபால்டு, இணைச் செயலர் கெஜின், குழந்தைகள் பாராளுமன்ற தேசிய அலுவலர் பிரவின், விசைப்படகு உரிமையாளர் சங்க செயலர் பிராங்கிளின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பேரணி காணிக்கை மாதா ஆலயம் முன் இருந்து தொடங்கி மீன்பிடித்துறைமுகத்தில் நிறைவடைந்தது. அங்கு மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai