Enable Javscript for better performance
நாகராஜா கோயில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாகராஜா கோயில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றம்

    By நாகர்கோவில்  |   Published on : 27th January 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் தைப்பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி, காலை 7 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்று பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6.15மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், இரவு 9.45 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெற்றது.

    விழாவின் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி வாகனத்தில் எழுந்தருளலும், சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஜன.30 ஆம் தேதி, 5 ஆம் திருநாள் அன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சுவாமி கமல வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவும், 6.30 க்கு ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மண்டகப்படியும், 8.45 மணிக்கு வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது. இரவு 9.45 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

    பிப்.1 ஆம் தேதி 7ஆம் திருநாள் அன்று காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளலும் மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலியும், 8.45 மணிக்கு சென்னை சின்மயி சகோதரிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

    தேர்த்திருவிழா: பிப்.3 ஆம் தேதி 9 ஆம் திருநாள் அன்று காலை 7.30 மணிக்கு மேல் 8.30மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அன்னதானம், இரவு 9.45 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறுகிறது.

    பிப். 4 ஆம் தேதி 10ஆம் திருநாள் மாலை 5 மணிக்கு சுவாமி எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு ஆறாட்டு நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளையினர் செய்து

    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai