Enable Javscript for better performance
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 31 இல் குறள்சார் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 31 இல் குறள்சார் போட்டிகள்

    By நாகர்கோவில்  |   Published on : 27th January 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவர் தினவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஜன.31) நடைபெறுகிறது.

    இதுகுறித்து குறளகம் நிறுவனர் கவிஞர் தமிழ்க்குழவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

    குறளகம் அமைப்பின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கான குறள்சார் போட்டிகள், பரிசளிப்புவிழா மற்றும் கலைவிழா இம்மாதம் 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

    மழலையர்களுக்கு அழகிய தமிழ்ப்பெயர், மாறுவேடப் போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறுகின்றன.

    1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்துப் போட்டி, குறள் ஒப்பித்தல், அதிகார பெயர்களும், 3 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒவியப் போட்டி, குறள் ஒப்பித்தல், குறள் கதைப் போட்டிகளும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விநாடி-வினா, குறள் எழுதுதல், குறளிசைப் போட்டிகளும், 9 முதல் 11ஆம் வகுப்பு வரை கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகளும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஒவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

    இப்போட்டிகள் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கலையரங்கில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 94425-80620 செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai