Enable Javscript for better performance
அகஸ்தீசுவரத்தில் ரூ. 29.30 லட்சத்தில் வட்டார சேவை மையம்- Dinamani

சுடச்சுட

    

    அகஸ்தீசுவரத்தில் ரூ. 29.30 லட்சத்தில் வட்டார சேவை மையம்

    By கன்னியாகுமரி  |   Published on : 28th January 2015 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி, ஜன. 27: அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 29.30 லட்சத்தில் அமையவிருக்கும் வட்டார சேவை மைய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அமைய உள்ள இந்த சேவை மையத்துக்கு பச்சைமால் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 12 கிராம ஊராட்சிகளின் தலைமை சேவை மையமாக இது செயல்படும்.

    விழாவில், ஊராட்சி ஒன்றியத் தலைவி இ.சாந்தி இசக்கிமுத்து, ஆணையாளர் நாகராஜன்,அரசு வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் டி.சதாசிவம், மகாதானபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கே.இசக்கிமுத்து, ஆரோக்கியபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.லீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai