Enable Javscript for better performance
இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல், ஜன. 27:  குளச்சலில் உள்ள ஜேம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தினவிழாவையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலதிட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, ஜேம்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருத்துவர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார். பொதுமேலாளர் பிரடிக் ராஜசேகர் முன்னிலை வகித்தார். முகாமில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இலவசமாக அனைத்து பரிசோதனைகளையும் செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    முன்னதாக மருத்துவர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. இதில், ஜேம்ஸ் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai