Enable Javscript for better performance
கருங்கல்லில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல்லில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

    By கருங்கல்  |   Published on : 28th January 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருங்கல், ஜன. 27: கருங்கல்லில் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கருங்கல் பேரூர் தி.மு.க. செயலர் ஜார்ஜ் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் தாமஸ், கருங்கல் பேரூராட்சித் தலைவர் எப்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேற்கு மாவட்டச் செயலர் மனோதங்கராஜ், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ததேயூ பிரேம்குமார், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், ஆலஞ்சி ஜோபின், பேரூர் செயலர்கள் டி.பி.ராஜன்(நல்லூர்), கோபால்(கீழ்குளம்), முன்னாள் பாலூர் ஊராட்சித் தலைவர் அஜித்குமார், மஜித், பரிமளா ஜெயராஜ், மனோகரன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai