Enable Javscript for better performance
குடிநீர் வசதி கேட்டு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவிகள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் வசதி கேட்டு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவிகள் முற்றுகை

    By நாகர்கோவில்  |   Published on : 28th January 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் குடிநீர் வசதி செய்துதரக்கோரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 170 பேர் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர். அந்த விடுதியில் குடி தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையாம்.

    இத்தகைய வசதிகளை செய்துதரக்கோரி மாணவ, மாணவிகள் ஏற்கெனவே பலமுறை போராட்டங்கள் நடத்தினராம். எனினும், குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

    இந்நிலையில், உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி கல்லூரியின் முன்பு மாணவிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முதல்வரின் அறைக்கு முன் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதையடுத்து, கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai