Enable Javscript for better performance
குமரிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குமரிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

    By நாகர்கோவில்  |   Published on : 28th January 2015 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: நாகர்கோவில் அருகே தம்மத்துக் கோணத்தில் இருந்து, கன்னியாகுமரிக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

    தம்மத்துக்கோணத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பேருந்து சேவையை கே.டி. பச்சைமால் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து அதிகாரி திருவம்பலம்பிள்ளை, ஜெராலின், ஜெயலலிதா  பேரவை துணைச் செயலர் செல்வக்குமார், நகரச் செயலர் சந்திரன், தோவாளை ஒன்றிய பாசறை செயலர் நவமணி மற்றும் நிர்வாகிகள் பொன். சேகர், செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்தப் பேருந்து தம்மத்துக்கோணத்தில் இருந்து புறப்பட்டு ராமன்புதூர், வடசேரி, அண்ணா பேருந்து நிலையம் வழியாக கன்னியாகுமரியைச் சென்றடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai