Enable Javscript for better performance
குமரி அருங்காட்சியகத்தில் 30இல் கட்டுரைப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    குமரி அருங்காட்சியகத்தில் 30இல் கட்டுரைப் போட்டி

    By கன்னியாகுமரி  |   Published on : 28th January 2015 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி, ஜன. 27: கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக தின விழாவை முன்னிட்டு, ஜன. 30இல் பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறஉள்ளது.

    இதுகுறித்து, அருங்காட்சிய காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி காந்தி மண்டபச் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் வரும் 30ஆம் தேதி அருங்காட்சியக தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    முற்பகல் 11 மணிக்கு போட்டிகள் தொடங்கும். அன்று மாலையில் போட்டியில் வெற்றி பெறுவோருக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 6, 7ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டியும், 8, 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டியும் நடைபெறுகிறது.

    "எனது குமரி அருங்காட்சியகம்' என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெறும். எழுதுவதற்குத் தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுதுப் பொருள்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் போட்டி தொடங்குவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாக பள்ளி அடையாள அட்டையுடன் குமரி அருங்காட்சியக அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652-246233 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai