Enable Javscript for better performance
கேரளத்தில் முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் களியக்காவிளை வரை இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்தில் முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் களியக்காவிளை வரை இயக்கம்

    Published on : 28th January 2015 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள நிதி அமைச்சர் பதவி விலக கோரி, அம்மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தால் குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டும் இயக்கப்பட்டன.

    கேரளத்தில் மூடப்பட்ட மதுக்கூடங்களை திறக்க, அதன் உரிமையாளர்களிடமிருந்து கேரள நிதியமைச்சர் மானி, லஞ்சம் வாங்கியதாக அண்மையில் புகார் எழுந்தது. இதையடுத்து, அம்மாநில இடதுசாரி கட்சிகள், பாஜக உள்ளிட்டவை அமைச்சர் பதவி விலக கோரி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரள மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த பாஜக அறிவித்திருந்தது.

    இதையடுத்து, கேரளத்தில் பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், வாடகை கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் களியக்காவிளை பேருந்து நிலையம் வந்து நாகர்கோவிலுக்கு திரும்பிச் சென்றன.

    திருவனந்தபுரத்திலிருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, வேலூர், வேளாங்கண்ணி, ஊட்டி உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகள் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. கேரளப் பகுதி வழி கொல்லங்கோடுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் கோழிவிளை, குளப்புறம் வழியும், கோழிவிளை- நடைக்காவு வழியும் இயக்கப்பட்டன.

    கேரளத்துக்குச் செல்லும் சரக்கு லாரிகள், களியக்காவிளை அருகே சாலையோரங்களில்  நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் கேரளம் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai