Enable Javscript for better performance
கொல்லங்கோடு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கொல்லங்கோடு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடக்கம்

    By நாகர்கோவில்,  |   Published on : 28th January 2015 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: கொல்லங்கோடு அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக திருவிழா வியாழக்கிழமை (ஜன. 29) தொடங்குகிறது.

    இக்கோயில் 6ஆம் ஆண்டு புனப்பிரதிஷ்டை திருவிழா, தூக்கப் பறக்கும் காவடி, அக்னிக் காவடி மற்றும் கும்பாபிஷேக விழா ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜன. 29ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்படுகிறது. காலை 11.30 மணிக்கு விழா தொடக்க நிகழ்ச்சி திருக்கோயில் மற்றும் சமுதாயக் கமிட்டி தலைவர் கே. நாகன்பிள்ளை தலைமையில் நடைபெறுகிறது. விழாவை குத்துவிளக்கேற்றி விசுவ இந்து பரிஷத் தென்னிந்திய பொதுச் செயலர் கே.என். வெங்கடேஷ்வரன் தொடங்கிவைக்கிறார். 9ஆம் திருவிழாவன்று (பிப். 6) காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனையும் மாலை 5 மணிக்கு சூழால் கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து காவடி ஊர்வலம், பால்குடம் ஆகியவை கோயிலுக்கு எடுத்துவரப்படுகிறது. பின், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றுகிறார்.

    10ஆம் திருவிழாவன்று (பிப்.7) காலை 11 மணிக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai