Enable Javscript for better performance
சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில், ஜன. 27: நாகர்கோவில் அருகே வெள்ளமோடி உதயா பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது.

    சன், உதயா கல்லூரிகளின் தாளாளர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சி. ஜெயசந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டி.எஸ்.பி.  கங்காதர், மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார், மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ், குளச்சல் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், துறைத் தலைவர்கள் கே.சி. வினோத்குமார், வசந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai