Enable Javscript for better performance
சிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

    By நாகர்கோவில்  |   Published on : 28th January 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: சிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இக்கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். லீமாரோஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலர் என். முருகேசன் பங்கேற்றுப் பேசியது:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொன்றுதொட்டு சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமன்றி, கேரளத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள். இதன்மூலம் பல லட்சம் ரூபாய் காணிக்கை வருவாய் கிடைக்கிறது. ஆனால் சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தர்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும் சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள சாலைகளைச் சரி செய்யவும், சுகாதார வசதிகள் செய்து கொடுக்கவும் முன்வரவேண்டும். மேலும், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சிவராத்திரியன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai