Enable Javscript for better performance
ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு

    By கன்னியாகுமரி  |   Published on : 28th January 2015 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி, ஜன. 27: கன்னியாகுமரி அருகே ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான துணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    கன்னியாகுமரி அருகே கிளாரட் நகரைச் சேர்ந்தவர் ஆன்றனி ராஜா (46). இவர் தெற்குக் குண்டல் பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். கடையை அவரது மனைவி தயா அருள்நிதி கவனித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறக்க வந்த தயா அருள்நிதி, பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கடை திறந்து கிடந்ததைப் பார்த்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான துணிகள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து, ஆன்றனி ராஜா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai