Enable Javscript for better performance
தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

    By நாகர்கோவில்  |   Published on : 28th January 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: தொழிலாளர் நல வாரியம் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

    விழாவில் 15 பேருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 97,500 கே.டி. பச்சைமால் எம்.எல்.ஏ. வழங்கினார். விழாவிற்கு தலைமை வகித்த தொழிலாளர் நல வாரிய அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்து பேசியது: தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு  கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளாக இதுவரை ரூ. 4.30 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர். காரவிளை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன். சேகர், வேளாண் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் செல்வகுமார், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai