Enable Javscript for better performance
நல்லூர் அரசுப் பள்ளியில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.

    இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோபிரகாஷ் தலைமை வகித்தார். நாகர்கோவில் நிதிசார் கல்வி மற்றும் கடன் ஆலோசனை மையத் தலைவர் கோபாலகிருஷ்ண பிள்ளை முன்னிலை வகித்தார்.

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் சிவசாமி கொடியேற்றினார். தொடர்ந்து அவர் விளையாட்டு, பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    இதில், உதவி தலைமை ஆசிரியர் இராபர்ட் நிக்கல்சன், யோகினி, கோகிலா மற்றும் பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர் ஜார்ஜ்வில்லியம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai