Enable Javscript for better performance
வேலை உறுதி திட்ட தணிக்கையாளர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை, ஜன. 27: மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மலையடி ஊராட்சியில் வேலை உறுதி திட்ட சமூக தணிக்கைப் பணிக்கு சமூக தணிக்கையாளர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மேல்புறம் ஊராட்சி ஒன்றிய தணிக்கை வட்டார வள அலுவலர் என்.எம். பிரேம்ராஜ் தெரிவித்ததாவது, குமரி மாவட்ட கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவேடுகளை ஆய்வு செய்ய ஜன. 23 ஆம் தேதி முதல் சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.

    இதில் மலையடி ஊராட்சி வேலை உறுதி திட்ட சமூக தணிக்கையாளர் பணிக்கு வன்னியூர் ஊராட்சியிலிருந்து தணிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கான தேர்வு மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 23 ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் கிராம ஊராட்சி சமூக தணிக்கையாளர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சமூகத் தணிக்கை மேற்கொள்வது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான பயிற்சியை மேல்புறம் ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் என்.எம்.பிரேம்ராஜ் அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai