Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

    By நாகர்கோவில்  |   Published on : 15th April 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகர்கோவிலில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்டச் செயலரும், கன்னியாகுமரி பேரவைத் தொகுதி வேட்பாளருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எ.நாஞ்சில் முருகேசன், குளச்சல் தொகுதி வேட்பாளர் கே.டி.பச்சைமால், கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் எ.மேரிகமலபாய், சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின்செல்வராஜ், மாவட்ட துணைச் செயலர் ஹெப்சிபாய், பொருளாளர் எ.ராஜன், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், அம்பிளிகலா, நிர்வாகிகள் சேவியர் மனோகரன், வழக்குரைஞர் ஆதிலிங்கம், ரபீக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    திமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் சின்னத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில், மாநில மீனவரணிச் செயலர் பெர்னார்டு, கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கேட்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் சிவகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், வட்டாரத் தலைவர் ராஜா, முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் குமாரதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மீனா தேவ், பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் ஷீபா பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்டச் செயலர் முருகேசன், அந்தோணி, மதிமுக நகரச் செயலர் ஜெரால்டு, விடுதலைச் சிறுத்தைகள் பகலவன், தேமுதிக கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் ஆதிலிங்க பெருமாள் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் டி.ஆர்.செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஜான்விக்டர்தாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தக்கலை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குமாரபுரம் வலியவிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பத்மநாபபுரம் தொகுதி  விடுதலைச் சிறுத்தைகள் செயலர் மேசியா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மாத்தூர் ஜெயா முன்னிலை வகித்தார். பத்மநாபபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர்  டி.ஜெகநாதன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தேமுதிக ஒன்றியச் செயலர் செல்வின், மாநிலப் பேச்சாளர் நாஞ்சில் மணி, கோதநல்லூர் பேரூர் செயலர் டேவிட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் சைமன்சைலஸ், இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் ராஜு, மதிமுக ஒன்றியச் செயலர் ஜே.பி.சிங், மாவட்ட பொறியாளர் அணி சுரேஷ்குமார், வட்டார தமாகா தலைவர்  ராஜேந்திரராஜ், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் முருகன், ஜெஸ்டின், அருண், ஜெலஸ்டின், வின்ஸ், ஷைன், காட்சன், கபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தக்கலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு வேட்டி சேலை, பிறந்த குழந்தைக்கு மோதிரம், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள் ஆகியன வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

    குமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியன சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பி.பால்ராஜ் தலைமை வகித்தார். அம்பேத்கர் படத்துக்கு ஜான்முரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    டாக்டர் ஜே. ரவி முன்னிலையில் ஏழை, எளியோருக்கு  வேட்டி சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிறந்த முதல் குழந்தைக்கு டாக்டர் எஸ்.குமாரசுவாமி மோதிரம் அணிவித்தார். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருள்களை நடராஜன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், நிர்வாகிகள் விக்டர் ஜான், ரவி, வேலாயுதம், சுந்தரதாஸ், மார்க், இஸ்ரவேல், முத்தம்மாள், சாந்தா, மகளிரணித் தலைவி சரோஜம், துணைத் தலைவர் அருள்தாஸ்,  சந்திரன், சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் பொருளாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்கச் செயலர் ரிச்சர்ட் மனுவேல் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai