Enable Javscript for better performance
இரு நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இரு நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: ஆட்சியர் எச்சரிக்கை

    By நாகர்கோவில்  |   Published on : 15th April 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் ஏப். 15 ஆம் தேதி முதல் 2 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழகத்தில் 2 நாள்களுக்கு அதிக வெப்பம், மற்றும் அனல் காற்று அபாயம் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை  பாதுகாக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

    நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையான அளவுக்கு நீர் அவ்வப்போது அருந்த வேண்டும். கனம் குறைந்த ஆடைகள், நுண்ணிய பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.   ஆடையை இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதச் சத்து கொண்ட உணவு வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் தயார் செய்த லெசி, மோர், கஞ்சி தண்ணீர், எலுமிச்சை பானம், பால் போன்றவை அருந்தலாம்.  இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது நல்லது. மின் விசிறி, ஈரமான துணிகள் உபயோகப்படுத்தலாம். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

    கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட, மயக்கம் அடைந்த நபரை குளுமையான இடத்தில் (நிழலில்) படுக்க வைக்க வேண்டும். ஈரத்துணியால் அவ்வப்போது துடைக்க வேண்டும். தண்ணீரை தலை, முகத்தின் மீது  தெளிக்க வேண்டும். எலுமிச்சை சாறு, கஞ்சி அல்லது பழச்சாறு போன்றவை பருக கொடுக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai