Enable Javscript for better performance
கோதையார் மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ்- Dinamani

சுடச்சுட

    

    கோதையார் மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ்

    By தக்கலை  |   Published on : 15th April 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோதையார் மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன் என பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

    பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவித்த பின்னர் தக்கலை வந்த அவர், அண்ணா, அம்பேத்கர் உருவப் படங்களுக்கும், தியாகி குஞ்சன் நாடார், காமராஜர் ஆகியோரது சிலைகளுக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி: ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். ரப்பர் விவசாயிகளை பாதுகாக்க, ரப்பருக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். நீராதாரங்களை பாதுகாக்க, நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சிப்பாறை அணையில் தூர் வாரி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வேன். பத்மநாபபுரம் நகராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். கோதையார் மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுப்பேன்   என்றார் அவர்.

    நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. ரெஜினால்டு, ஒன்றியச் செயலர்கள் ராஜேந்திரன், டி.பி.ராஜன், அருளானந்த ஜார்ஜ்,  நகரச் செயலர் மணி, மாவட்ட அவைத் தலைவர் பப்புசன், பொருளாளர் ஜான்பிரைட், வழக்குரைஞர் ஸ்ரீகுமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai