Enable Javscript for better performance
தினமணி, தெ.தி. இந்துக் கல்லூரி சார்பில் இன்று தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தினமணி, தெ.தி. இந்துக் கல்லூரி சார்பில் இன்று தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

    By நாகர்கோவில்  |   Published on : 15th April 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில், தினமணி, தெ.தி. இந்துக் கல்லூரி ஆகியன சார்பில், தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை (ஏப். 15) நடைபெறுகிறது.

    தினமணி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், பேரணி, பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியும், தினமணியும் இணைந்து நடத்தும் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து, முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கிவைக்கிறார்.  தொடர்ந்து, மாணவர், மாணவிகள் மே 16 ஆம் தேதி தவறாமல் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கின்றனர்.

    நிகழ்ச்சிக்கு, கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் பி.ஆறுமுகம் பிள்ளை, முதல்வர் எஸ்.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.இளங்கோ, கோட்டாட்சியர் மதியழகன், மகளிர் திட்ட இயக்குநர் தீ.சடையப்ப விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai