Enable Javscript for better performance
திருவரம்பு அருகே சாலைப் பணி தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    திருவரம்பு அருகே சாலைப் பணி தடுத்து நிறுத்தம்

    By குலசேகரம்  |   Published on : 15th April 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம்-திருவரம்பு சாலை சீரமைக்கும் பணியை பொதுமக்கள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

    சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் கிடந்த குலசேகரம்-திருவரம்பு சாலை ரூ. 1.85 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து இச்சாலை வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சாலை சீரமைப்புப் பணிகளும் மந்த நிலையிலேயே நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர்.

    இந்நிலையில் நீண்ட நாள்களுக்கு பிறகு திருவரம்பு அரசுப் பள்ளி அருகே சாலையை சீரமைக்கும் வகையில் இரண்டு மினிலாரியில் ஜல்லிகள் வியாழக்கிழமை மாலையில் கொண்டு வரப்பட்டது.

    அப்போது அங்கு வந்த சாலை போராட்டக் குழுவைச் சேர்ந்த விஜயன், ராஜன் மற்றும்  திருவட்டாறு பேரூராட்சி வார்டு உறுப்பினர் எட்வின்ராஜ், குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் ஷெர்லின் சிங் உள்ளிட்டோர், சாலைப் பணியை இடைவிடாமல் தொடர்ந்து நடத்துவதாக இருந்தால் மட்டுமே சாலையில் ஜல்லிகள் இறக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் திரும்பிச் செல்லும் படி கூறி, ஜல்லிகளை இறக்கி வைக்கவிடாமல் தடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வந்து பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவாக தேமுதிக வேட்பாளர் ஜெகநாதன், திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடம் வந்தனர்.  இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி விஷ்ணுவர்த்தன், இரவு 9 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai