Enable Javscript for better performance
நான்குமுனைப் போட்டிக்கு தயாராகும் பத்மநாபபுரம்- Dinamani

சுடச்சுட

    

    நான்குமுனைப் போட்டிக்கு தயாராகும் பத்மநாபபுரம்

    By குலசேகரம்  |   Published on : 15th April 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக,  பாஜக, தேமுதிக என 4 முனைப் போட்டிக்கு இத் தொகுதி தயாராகி வருகிறது.

    பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள் ஜெலஸ்டின், பாஜக வேட்பாளர் ஷீபா பிரசாத் ஆகியோர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியைத் முதலில் தொடங்கினர். பின்னர் அதிமுக வேட்பாளராக கே.பி. ராஜேந்திர பிரசாத் அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் டி. ஜெகநாதன் அறிவிக்கப்பட்டார்.  இதற்கிடையே திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் மிகுந்த நம்பிக்கையுடன் தனக்குத் தான் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ஒரு வாரமாக முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்ததோடு, வீடு வீடாகச் சென்று வாக்கும் சேகரித்து வந்தார். இந்நிலையில் திமுக வேட்பாளராக, மேற்கு மாவட்டச் செயலர் டி. மனோ தங்கராஜ் அறிவிக்கப்பட்டதால்,  புஷ்பலீலா ஆல்பன் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    எனினும் இத் தொகுதியில் பலம் வாய்ந்த பிரதானக் கட்சிகளான பாஜக, அதிமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக தேர்தல் களத்தில் நிலவி வந்த மந்தநிலை நீங்கி, 4 முனைப் போட்டிக்கு இத் தொகுதி விறுவிறுப்புடன் தயாராகி வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai