சுடச்சுட

  

  நாகர்கோவில் கண்காட்சியில் அசத்திய 22 வகை நாய்கள்: விஜயகாந்தின் 10 வகை நாய்கள் பங்கேற்பு

  By நாகர்கோவில்  |   Published on : 07th August 2016 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகர்கோவிலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 22 வகையான நாய்கள் பார்வையாளர்களை அசத்தின. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்குச் சொந்தமான 10 வகை நாய்களும் பங்கேற்றன.

  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சென்னை கேனல் கிளப் சார்பில் தேசிய நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வெல்லர், புல் மஸ்தீப், டாபர்மேன், திபெத்தியன் நஸ்தீப்ட், பாக்ஸர், பக், ஹெவன்ஸ், பிரென்ச் புல்டாக், ஸ்பேனியல், சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட 22 வகைகளைச் சேர்ந்த 240 நாய்கள் கலந்துகொண்டன.

  தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான லேபர்டாக், லிபர்ட், அமெரிக்கன் சிங்கர் உள்ளிட்ட 10 வகை நாய்களை போட்டியில் கலந்துகொள்ளச் செய்வதற்காக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கொண்டுவந்திருந்தார். இதில், நாய்களுக்கு 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெறும் நாய்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai