Enable Javscript for better performance
குலசேகரம் அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு: மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு: மறியல்

    By குலசேகரம்  |   Published on : 08th February 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம் அருகே அண்டூரில் மத வழிபாடு செய்வதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அண்டூர் புல்லை பகுதியில் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு அப்பகுதியிலுள்ள மற்றொரு மதப்பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குலசேகரம் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். முறையான அனுமதி பெற்று ஜெபக்கூட்டத்தை நடத்துமாறு ஜெபக்கூட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai