Enable Javscript for better performance
பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்:வருவாய் அதிகாரி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்: வருவாய் அதிகாரி ஆலோசனை

    By DIN  |   Published on : 17th November 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரிக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட வருவாய் அதிகாரி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    இதையொட்டி, நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ தலைமை வகித்தார். அப்போது, துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் அவசர காலப் பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
     இதில் வருவாய்த்துறை, பேரூராட்சிகள் துறை, காவல்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, சுகாதாரத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை, வணிகவரித் துறை, போக்குவரத்துத்துறை, பூம்புகார் படகு போக்குவரத்துத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஹோட்டல் தமிழ்நாடு, ஆவின் பாலகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், தேசிய மாணவர் படை ஆகிய துறை அலுவலர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை நடத்தினார்.
    இதில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பி. பாரதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  முத்துகுமார், நாகர்கோவில் கோட்டாட்சியர் ஆர். ராஜ்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரா. வேணுகோபால், சுற்றுலா அலுவலர்  ஆ. நெல்சன், மாவட்ட வணிக வரி அலுவலர் செ. ராஜகோபால், அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் ஏ.வி. மூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.ரஜினிகாந்த், பூம்புகார் படகு போக்குவரத்து கழக மேலாளர் வின்ஸ்லிராய், ஆவின் பொதுமேலாளர் சுந்தரமகாலிங்கம், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல்அலுவலர் திருமலைகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai