Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில், நாகர்கோவிலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் சகாய திலக்ராஜ் தலைமை வகித்தார்.  சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி புதிய நோட்டுகளை வழங்க வேண்டும். சங்கங்களின் கையிருப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய வங்கி பெற்றுக்கொள்ள வேண்டும்.
    திருமணம் உள்ளிட்ட சம்பிரதாயங்களுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை உண்மைத்தன்மையின் அடிப்படையில் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மாவட்டச் செயலர் முருகானந்தம், பொருளாளர் சுவாமிதாஸ், துணைத் தலைவர்கள் விக்டர்தாஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சம்பத்சந்திரா, முன்னாள் மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கந்தப்பன், வேலப்பன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் உள்ள ஊழியர்கள் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டதால், மாவட்டத்தில் பல பகுதிகளில் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai