Enable Javscript for better performance
அண்ணா பல்கலை. தரவரிசைப் பட்டியலில் அருணாச்சலா மகளிர் கல்லூரி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பல்கலை. தரவரிசைப் பட்டியலில் அருணாச்சலா மகளிர் கல்லூரி முதலிடம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரிகளில் மாநிலத்தில் முதலிடமும், பி.இ. பாடப்பிரிவில் 12 ரேங்குகள் பெற்று இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இக்கல்லூரி  முதலிடத்தைப் பெற்றுள்ளது.  
    இக்கல்லூரி நிகழாண்டு 34 ரேங்க் பெற்றுள்ளது. பி.இ. பட்டப்படிப்பில் நான்கு பாடப்பிரிவுகளோடு, மாவட்டத்தில் அதிகமான ரேங்குகள் பெற்றுள்ளன.
    இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்களை கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர், தாளாளர்  கிருஷ்ணசுவாமி ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai