Enable Javscript for better performance
அதிமுக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் மேரிகமலபாய், துணைச் செயலர் ஹெப்சிபாய், பொருளாளர் என்.என்.ஸ்ரீஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலர் ஏ.ஞானசேகர் வரவேற்றார்.
    மாவட்ட அதிமுக செயலர் ஏ.விஜயகுமார் எம்.பி. சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கட்சி வெற்றிக்காக உழைத்த இம்மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
    கூட்டத்தில், ஒன்றியச் செயலர்கள் தாணுபிள்ளை, சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ராஜரத்தினம், மத்தியாஸ், ரெஜிஸ்ராஜ், ஜீன்ஸ், ஆல்பர்ட்சிங், நகரச் செயலர்கள் முகமதுதாசிம், குமார், ராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் ஏ.கனகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாகர்கோவில் நகரச் செயலர் நாஞ்சில் எம்.சந்திரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai