Enable Javscript for better performance
சாமிதோப்பிலிருந்து அரசம்பதிக்கு சந்தனக்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    சாமிதோப்பிலிருந்து அரசம்பதிக்கு சந்தனக்குட ஊர்வலம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து பொற்றையடி அரசம்பதிக்கு சந்தனக்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    பொற்றையடி அரசம்பதி அய்யா வைகுண்டசாமி பதி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) பட்டாபிஷேகம் நடைபெற்றது.  இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சரவிளக்குப் பணிவிடை, காலை 7.30 மணிக்கு உகப்படிப்பு, காலை 8.30 மணிக்கு சாமிதோப்பில் முத்திரிப்பதம் எடுத்து பதிவலம் வந்து பக்தர்கள் சந்தனக்குடம் தலையில் எடுத்து ஊர்வலமாக அரசம்பதி நோக்கி புறப்பட்டனர்.
    ஊர்வலத்துக்கு, அரசம்பதி நிர்வாகி சிவச்சந்திரன் தலைமை வகித்தார்.  ஊர்வலத்தில் செண்டைமேளம், நையாண்டி மேளம், கும்மியாட்டம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் அணி வகுத்துச் சென்றனர்.  தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம், மாலை 5 மணிக்கு சமயஉரை, இரவு 7.30 மணிக்கு இந்திர வாகன பவனி, இரவு 9 மணிக்கு அய்யாவுக்கு தாலாட்டு மற்றும் கூட்டு பிரார்த்தனை, இரவு 10 மணிக்கு அருளிசை வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு பால்வைத்து பணிவிடை ஆகியன நடைபெற்றது.
    விழா ஏற்பாடுகளை அரசம்பதி நிர்வாகி சிவச்சந்திரன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai