Enable Javscript for better performance
நலவாரிய தொழிலாளர்கள் டிச. 2-க்குள் வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நலவாரிய தொழிலாளர்கள் டிச. 2-க்குள் வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல வாரியத் தொழிலாளர்கள் டிச. 2ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் சிலர், இதுவரை வங்கிக் கணக்கு தொடங்காமல் இருந்தனர்.
    அவர்கள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்கும் விதமாக, மாவட்டத் தொழிலாளர் அலுவலகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, தொழிலாளர் அலுவலர் சுடலைராஜ் தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது வங்கிக் கணக்கு தொடங்கிய தொழிலாளர்களுக்கு, ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைப்பதற்கு உரிய படிவங்கள் வழங்கப்பட்டன. டிச. 2ஆம் தேதிக்குள் அனைத்து தொழிலாளர்களும் வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai