Enable Javscript for better performance
நாகர்கோவிலில் அரசு அலுவலர்களுக்கு நாளை விகாஸ்பீடியா பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் அரசு அலுவலர்களுக்கு நாளை விகாஸ்பீடியா பயிற்சி

    By DIN  |   Published on : 28th November 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு அலுவலர்களுக்கான விகாஸ்பீடியா பயிற்சி நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை(நவ.29) நடைபெறுகிறது.
    இதுகுறித்து விகாஸ்பீடியா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.மாரியப்பன் வெளியிட்ட அறிக்கை: சென்னை சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்,  ஹைதராபாத் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் ஆகியன சார்பில், விகாஸ்பீடியா பயிற்சி செவ்வாய்க்கிழமை (நவ.29) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்த் துறை கூட்டரங்கில் நடைபெறுகிறது.
    இப்பயிற்சியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள், கால்நடை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலர்கள், மக்கள் கணினி மைய அலுவலர்கள், நேரு இளையோர் மைய தன்னார்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.
    இம்முகாம் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முன்னிலையில் நடைபெறுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai