Enable Javscript for better performance
நாகர்கோவிலில் 166 விவசாயிகளுக்கு ரூ.37.13 லட்சம் கடனுதவி: அ.விஜயகுமார் எம்.பி. வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் 166 விவசாயிகளுக்கு ரூ.37.13 லட்சம் கடனுதவி: அ.விஜயகுமார் எம்.பி. வழங்கினார்

    By DIN  |   Published on : 28th November 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக, 166 விவசாயிகளுக்கு ரூ.37.13 லட்சம் மதிப்பில், பயிர்க் கடன்களை அ.விஜயகுமார் எம்.பி. வழங்கினார்.
    விழாவில் வடக்கு தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 14 விவசாயிகளுக்கு ரூ.3.25 லட்சம், குமாரபுரம் தோப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 7 விவசாயிகளுக்கு ரூ. 2.20 லட்சம், பரப்பற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 145 விவசாயிகளுக்கு ரூ.31.68 லட்சம் என 3 சங்கத்திலும் சேர்த்து மொத்தம் 166 பயனாளிகளுக்கு ரூ. 37.13 லட்சம் கடனுதவிகளை விஜயகுமார் எம்.பி. வழங்கி பேசினார்.
    அப்போது அவர் பேசுகையில், இம்மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்க ரூ.220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடன்கள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
    நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவுத் தலைவர் எம். சேவியர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சம்பத்சந்திரா, அரசு வழக்குரைஞர் ஞானசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவர் கனகராஜன், மாவட்ட பொருளாளர் என்.என். ஸ்ரீஐயப்பன், மேரிகமலாபாய், டாரதிசாம்சன், ஹெப்சிபாய், சந்திரன், சந்தையடி பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai