Enable Javscript for better performance
நாட்டுக்கோழி பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஆய்வு மேற்கொண்டார்.
    இம்மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்துக்கு 100 அலகுகள் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் நாகர்கோவில் கோட்டத்துக்கு 40 அலகுகள், தக்கலை கோட்டத்துக்கு 60 அலகுகள் என பிரித்து வழங்கப்பட்டது. இந்த அலகுகளில் கோழி வளர்ப்பதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    இத்திட்டத்தின்படி, ஒரு அலகுக்கான திட்டச் செலவில் ரூ.44 ஆயிரத்து 850 அரசு மானியத்துடன், ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 550 பயனாளியின் பங்களிப்பும் சேர்த்து செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் கொட்டகை மற்றும் வேலி அமைத்தல், உபகரணங்கள் கொள்முதல், கோழிக்குஞ்சுகளுக்கான கிரயத் தொகை, தீவனத்துக்கான செலவினம் ஆகிய அனைத்து செலவினங்களுக்கும் அரசு பங்களிப்பு 25 சதவீதமும் மீதி தொகை பயனாளிகள் பங்களிப்பாகவும் செயல்படுத்தப்படுகிறது.
    மேலும், நாட்டுக்கோழி பண்ணைகளை மேம்படுத்தும் விதமாக 10 பண்ணைகளுக்கு ஒரு பீட் மிஸ்ஸிங் யூனிட்  ரூ.4 லட்சம் மதிப்பில் நிறுவ, மகளிர் திட்ட அலுவலரிடம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai