Enable Javscript for better performance
நாகர்கோவிலில் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 30th November 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ஆந்திர மாநிலத்திலிருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தது. லாரியை விஜயவாடாவைச் சேர்ந்த சக்திநாராயணன் ஓட்டிவந்தார். அந்த லாரி செவ்வாய்க்கிழமை அதிகாலை நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி சந்திப்பில் திரும்பியபோது, அதன் வலது முன்புற டயர் திடீரென கழன்று சாலையில் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த பேப்பர் கட்டுகள் சாலையில் விழுந்தன. ஓட்டுநர் இலேசான காயத்துடன் தப்பினார்.
    இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவ்வைசண்முகம் சாலையில் இருந்து ஒழுகினசேரிக்கு செல்லமுடியாமல் வாகனங்கள் தவித்தன.
    தகவலறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸார், அங்கு வந்து ராட்சத கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai