Enable Javscript for better performance
அமைதியை வலியுறுத்தி கார்கிலுக்கு பைக் பயணம் பா.ஜ. மாநில துணைத் தலைவர் உள்பட 9 பேர் குமரியில் கைதாகி- Dinamani

சுடச்சுட

    

    அமைதியை வலியுறுத்தி கார்கிலுக்கு பைக் பயணம் பா.ஜ. மாநில துணைத் தலைவர் உள்பட 9 பேர் குமரியில் கைதாகி விடுதலை

    By DIN  |   Published on : 08th October 2016 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னிகுமரியிலிருந்து கார்கிலுக்கு பைக் பயணத்தை தொடங்கி வைத்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் உள்பட 9 பேர் வெள்ளிக்கிழமை கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
    ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ராஜசேகரராவ் (50), பாலசுப்பிரமணியம் (34). அதேபகுதியைச் அகிலபாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விஜயகுமார் (20), ஜெகதீஷ்ரெட்டி(19), ரமானுஜநாயுடு(19), ஹரிகிருஷ்னா (19) ஆகிய 6 பேரும் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை விரட்டியடித்த இந்திய ராணுவத்தினருக்கும், பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், உள்நாட்டு அமைதியை வலியுறுத்தியும் கன்னியாகுமரியிலிருந்து கார்கிலுக்கு பைக் மூலம் செல்ல முடிவு செய்தனர்.
    இதற்காக வெள்ளிக்கிழமை காலை கன்னியாகுமரிக்கு வந்தனர். அங்கு காந்திமண்டபம் முன்பிருந்து இவர்களின் பயணத்தை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் இந்து கோயில் கூட்டமைப்பு மாநிலச் செயலர் ராஜா, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில இணைச் செயலர் ப்ரித்விராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொடங்கி வைப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பைக் பயணம் தொடங்கி வைப்பதற்காக பாஜக நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் போலீஸார் நிகழ்ச்சிக்கான முன்அனுமதி பெறவில்லை என தெரிவித்து எம்.ஆர்.காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 9 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
    இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பைக் பயணத்துக்கான அனுமதி கடிதத்தை எழுதிக் கொடுத்தனர். அதன்பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai