Enable Javscript for better performance
களக்காடு அருகே பொத்தையில் தீ- Dinamani

சுடச்சுட

    

    களக்காடு அருகே மங்கம்மாள் சாலையில் உள்ள பொத்தையில் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, வனத் துறையினர் போராடி அணைத்தனர்.
    களக்காடு அருகேயுள்ள கள்ளிகுளம் மங்கம்மாள் சாலையில் பிரண்ட மலையும், அதனருகே இரு பொத்தைகளும் உள்ளன. இதில், பிரண்ட மலையில் கடந்த செப். 26ஆம் தேதி தீப்பிடித்தது. இதில் அப்பகுதியில் உள்ள சிறிய மரங்கள், உடும்பு, முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் தீக்கிரையாகின.
    இந்நிலையில், மங்கம்மாள் சாலையில் பிரண்ட மலை அருகேயுள்ள மற்றொரு பொத்தையில், வியாழக்கிழமை மாலையில் தீப்பிடித்தது. காய்ந்த நிலையில் இருந்த புல்லில் தீ வேகமாக பரவி, இரவு முழுவதும் எரிந்தது. தகவலறிந்து வந்த வனத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி இப்பகுதியில் தீவிபத்து ஏற்படுவதால், மர்ம நபர்கள் எவரேனும் இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    கண்காணிப்பு தேவை: களக்காடு மங்கம்மாள் சாலையில் கடந்த இரு ஆண்டுகளில், நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு களக்காட்டைச் சேர்ந்த ரத்னகுமாருக்கு சொந்தமான வேன் களக்காட்டிலிருந்து கடத்திவரப்பட்டு, மங்கம்மாள் சாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மங்கம்மாள் சாலையில் குற்றச் செயல்கள் நடைபெறுவதால், போலீஸார் இப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai