Enable Javscript for better performance
காளிமலை சமுத்திரகிரி ரத யாத்திரைக்கு குமாரகோவிலில் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காளிமலை சமுத்திரகிரி ரத யாத்திரைக்கு குமாரகோவிலில் வரவேற்பு

    By DIN  |   Published on : 08th October 2016 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியில் இருந்து காளிமலை சமுத்திரகிரி ரத யாத்திரையில் இருமுடிகட்டி மற்றும் புனிதநீர் சுமந்து செல்லும் பக்தர்களுக்கு குமாரகோவில் சந்திப்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
    காளிமலையில் நடைபெறும் துர்க்கா லட்சுமி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்ட சமுத்திரகிரி ரத யாத்திரை காளிமலைக்கு ஞாயிற்றுகிழமை சென்றடையும். இந்த ரத யாத்திரையுடன் இருமுடி கட்டி, புனித நீர் சுமந்து செல்லும் பக்தர்கள் வெள்ளிக்கிழமை குமாரகோவில் சந்திப்புக்கு வந்தனர். அவர்களுக்கு பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, அம்மனுக்கு பூஜையும் நடத்தப்பட்டது.
    நிகழ்ச்சியில் சேவாபாரதி மாநில இணை அமைப்புச் செயலர் ஆர்.கே.ராமசந்திரன், ஹிந்து கோயில் கூட்டமைப்புச் செயலர் வேலுதாஸ், பாஜக மாவட்ட பொதுச் செயலர் சி.தங்கப்பன், மாவட்ட பாஜக துணைத் தலைவர் ப.ரமேஷ், நிர்வாகிகள் டாக்டர் சுகுமாரன், மணி, சுகுமாரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai