Enable Javscript for better performance
கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் அக்.11இல் தீர்த்தவாரி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் அக்.11இல் தீர்த்தவாரி உற்சவம்

    By DIN  |   Published on : 08th October 2016 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (அக். 11) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
    இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் தீர்த்தவாரி நடைபெறும். இந்தாண்டு ஏகதின தீர்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு தெப்பகுளத்தில் பெருமாள் எழுந்தருள, தெப்பக் குளத்துக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சர்வதோஷ நிவர்த்திக்காக புருஷ சூக்தஹோமம், மழைவேண்டி கலசத்தில் வருண ஜெபம் நடைபெறுகிறது. இதையடுத்து உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai