Enable Javscript for better performance
தேசிய மீன்பிடித் திட்டம் உருவாக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடித் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் ப. ஜஸ்டின் ஆன்டணி மாவட்ட ஆட்சியருக்கும், துறை அதிகாரிகளுக்கும் அனுப்பிய மனு: மீனவர்கள் ஒடிசா போன்ற பிற மாநிலங்களில் மீன்பிடிக்கச் செல்லும் போது தங்கள் படகுகளை அம் மாநிலத்தவரின் பெயரில் பதிவு செய்து கொடுத்த பின்னரே அங்கு மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
    இது போன்ற கொத்தடிமை முறையால் மீனவர்கள் பல்வேறு அவலங்களை சந்தித்து வருகிறார்கள். இம் மீனவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊருக்கு வர முடியாததுடன், இவர்களின் கூலியும் சுரண்டப்படுகிறது. சில நேரங்களில் இம் மீனவர்களுக்கு விசைப்படகுகள் திருப்பித் தரப்படுவதில்லை.
    ஆகவே மீனவர்களை இத்தகைய கொத்தடிமை முறையிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடித் திட்டத்தை ஏற்படுத்தி, மீனவர்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும் சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கும் உரிமையை பெறவும், பிடிக்கப்பட்ட மீன்களை எந்த துறைமுகத்திலும் இறக்கி விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai