Enable Javscript for better performance
மரத்தில் பைக் மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    புதூர் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை இறந்தார்.
    விளாத்திகுளம் அருகேயுள்ள முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் கனகராஜ் (35). இவர் வியாழக்கிழமை இரவு, தனது மனைவி முத்துகுமாரியுடன் மோட்டார் சைக்கிளில் புதூருக்கு சென்றுகொண்டிருந்தாராம். புதூர் - பந்தல்குடி நெடுஞ்சாலை, சென்னமரெட்டிபட்டி வளைவில் இவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி முத்துகுமாரி காயமடைந்தார்.
    தகவலறிந்த புதூர் போலீஸார் அங்கு சென்று முத்துகுமாரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், கனகராஜின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai