Enable Javscript for better performance
அஞ்சல் நிலையம் முற்றுகையிட முயற்சி: 66 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் மத்திய அரசைக் கண்டித்து தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் வந்த எஸ்.டி.பி.ஜ கட்சியினர் வாயில் முன்பு குமரி மாவட்டத் தலைவர் சுல்பிகர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமை அஞ்சல் நிலையத்துக்கு முற்றுகையிட முயன்ற 8 பெண்கள் உள்ளிட்ட 66 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai