Enable Javscript for better performance
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி: முதன்மையர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி: முதன்மையர் தகவல்

    By DIN  |   Published on : 15th October 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்றார் மருத்துவக்கல்லூரி முதன்மையர்(டீன்) ரவீந்திரன்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி கடந்த ஏப்ரல் மாதம் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் இயந்திரம் தொடங்கப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் நோயாளிகள் ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம். 2 மணி நேரத்தில் பரிசோதனை  அறிக்கை அளிக்கப்படும்.
     இந்த ஸ்கேன் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களில் ரூ. 6 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவமனையில் ரூ.2,300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  வெளிநோயாளிகளும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
     முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு  இலவசமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்படும். ஏப்ரல் மாதம் ஸ்கேன் கருவி பொருத்தப்பட்ட பின்னர் இதுவரை 885 பேருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai