Enable Javscript for better performance
ஊரம்பு பகுதியில் மது விற்பனை: ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஊரம்பு பகுதியில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
     கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலர் மகேஷ் லாசர், செல்லப்பா மற்றும் ஊரம்பு பகுதியை சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
    கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஊரம்பு பகுதி, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு அரசு மாதிரி தொடக்கப் பள்ளி, சந்தை, 3 தேவாலயங்கள், மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில், கடந்த 2013 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை திறக்க அரசு முயற்சித்தது. பொதுமக்களின் எதிர்ப்பாலும், நீதிமன்ற உத்தரவாலும் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
     இதற்கிடையில் இப்பகுதியில் மதுக் கடைக்காக ஒருவர் கட்டுமானப் பணிகளை கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டார். அதற்கு ஊரம்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் தடை பெற்றதால் மதுக் கடைக்கான கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
     இந்நிலையில் ஊரம்பு தனியார் விளையாட்டு சங்கம் பெயரில் மதுக் கடை திறக்க ஒருவர் அனுமதி பெற்றிருக்கிறார். பொதுமக்களிடையே அமைதியை குலைப்பதாக இது அமையும் என்பதால் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனை கண்டித்து அக். 19 ஆம் தேதி ஊரம்பு சந்திப்பில் மறியல் நடத்தப்படும் என்றார் ராஜேஷ்குமார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai