Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டுப் போனது.
     நாகர்கோவில் நேசமணி நகரில் வசித்து வருபவர் ஜோதிசிங்(69), புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் வடமாநில சுற்றுலா சென்றிருந்தாராம். இந்நிலையில் ஜோதிசிங்கின் வீட்டின் முன்புற கதவு வெள்ளிக்கிழமை காலை  உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஜோதிசிங்குக்கு  தகவல் தெரிவித்தார்.  இதுகுறித்து ஜோதிசிங் நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு தனது வீட்டில் திருட்டு போயிருப்பது குறித்து தெரிவித்தார்.  நேசமணிநகர் போலீஸார் ஜோதிசிங் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். வீட்டில்  2 படுக்கை  அறைகளின் கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. ஜோதிசிங் ஊருக்கு வந்தால்தான் அவரது வீட்டில் திருடு போன பொருள்கள் குறித்த விவரம் தெரியவரும். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai