Enable Javscript for better performance
காவிரி பிரச்னை: அக்.17 ரயில் மறியலில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னை: அக்.17 ரயில் மறியலில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பு

    By DIN  |   Published on : 15th October 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  அக்.17 இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு  மக்கள் நலக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து, மார்க்சிஸ்ட் குமரி மாவட்டச் செயலர் என்.முருகேசன்,  மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.இசக்கிமுத்து, விடுதலைசிறுத்தை கட்சி கிழக்கு மாவட்டச் செயலர் திருமாவேந்தன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு  தெரிவித்துள்ளது.
     காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மத்திய பாஜக அரசு இந்த கடமையை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து நடைபெறும் மறியல் போராட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai